News September 23, 2024
முருகன் மலை கோவிலில் கிருத்திகை சிறப்பு

அம்மாபேட்டை அடுத்த வெள்ளக்கரட்டூரில் உள்ள வெள்ளிமலையில், மிகவும் சிறப்பு வாய்ந்த தண்டாயுதபாணி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை, கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Similar News
News August 14, 2025
ஈரோடு : பவானி – சித்தோடு சாலை சீரமைப்பு

பவானி-சித்தோடு நெடுஞ்சாலையில் பஸ்கள்,கனரக லாரிகள்,நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு, ஜல்லிகள் பரவலாக கிடந்தது. பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், நேற்று முன்தினம் குண்டும் குழியுமான இடங்களில், கான்கிரீட் போட்டு சாலையை அதிகாரிகள் சீரமைத்தனர்.
News August 14, 2025
ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News August 14, 2025
ஈரோடு அருகே புதுப்பெண் தற்கொலை

ஈரோடு: கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதிக்கும் (37) அவரது மனைவி வினோதினிக்கும் (34) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(ஆக.13) வினோதினி தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.