News December 29, 2025
மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.
Similar News
News January 23, 2026
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ நகரில், அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சையில் உள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸி.,யையும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிரவைத்து வருகிறது.
News January 23, 2026
இனி Wifi வேகம் அதிகரிக்கும்!

இந்திய தொலைத்தொடர்புத் துறை, மே 2025ல் 6 GHz அலைவரிசையில் 500 MHz அலைக்கற்றையை Wi-Fi சேவைகளுக்காக பொது பயன்பாட்டிற்கு விடுவிப்பதாக முன்மொழிந்தது. இந்நிலையில், 6 GHz Wi-Fi பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இனி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் Wifi வேகம் அதிகரிக்கும். மேலும், இதை உபயோகிக்க உரிமம் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
News January 23, 2026
ஜனவரி 23: வரலாற்றில் இன்று

*1897 – சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள். *1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. *1973 – அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமுடன் சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தார். *2004 – மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. *2005 – ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.


