News January 8, 2026

முன்மாதிரி விருது: நாகை ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை <>awards.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகளுடன் வருகிற பிப்.18ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

நாகை: எஸ்பி தலைமையில் குறைதீர் கூட்டம்!

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் K. S. பாலகிருஷ்ணன் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்கள். மேலும்பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

News February 11, 2026

நாகை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

நாகை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

கிராம உதவியாளர் சங்கத்தினர் 3- வது நாளாக போராட்டம்

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி, கால முறை உதியமாக வழங்க வேண்டும். அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!