News November 17, 2024
முன்னாள் ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை

நீலகிரி மாவட்டம், உதகை எமரால்டு பகுதியை சேர்ந்த முன்னாள் MRC 12 Madras மில் பணியாற்றிய இராணுவ வீரர் மோகன் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் தகனம் உதகை வண்டிச்சோலை பகுதியில் நடைபெற்றது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நீலகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நலசங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
Similar News
News March 1, 2026
நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நீலகிரி மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வந்து விடுவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 1, 2026
கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் இவரா ?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் விருப்பமனுத் தாக்கல் நிகழ்வில், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கோமதி சிவானந்த ராஜா தனது விருப்பமனுவை வழங்கினார். இந்நிகழ்வின் போது கூடலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
News March 1, 2026
நீலகிரியில் அதிரடி தடை!

முதுமலை புலிகள் காப்பகத்தில் போக்குவரத்து இடையூறைக் குறைக்க, தெப்பக்காடு மாயாற்றின் கரை மற்றும் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட சாலையோரப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்காகத் தடுப்புக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை ஒதுக்கப்பட்ட உணவகப் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


