News May 17, 2024
முன்னாள் மேயர் மறைவு – ஓபிஎஸ் இரங்கல்.

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் தா. மலரவன் இன்று காலமானார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கலை தெரிவித்துள்ளார். அம்மாவின் அன்பை பெற்றவருமான மலரவன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மலரவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
Similar News
News August 9, 2025
கோவை:10ம் தேதி இந்த ரயில் சேவை ரத்து

கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகத்தினர் இன்று கூறியதாவது: வரும் 10ம் தேதி காலை 9.40 மணிக்கு, போத்தனூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மெமு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யபட்டுள்ளது. அதே போல அன்று மதியம் 1.05 க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை வரும் மெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
News August 8, 2025
கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (09.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை வடக்கு மண்டலம் (வார்டு எண் -3) மடாலயம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 8, 2025
கோவை: பணம், தங்கத்துடன் இலவச திருமணம்!

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் ) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT