News December 8, 2024
முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். கருணாநிதியின் நம்பிக்கையை பெற்ற அவர், முதல்முறையாக புதுச்சேரி வரலாற்றில் 1980 – 83 வரை முதல்வராக ( திமுக) இருந்தவர். அதன்பின் திமுகவுக்கும்- காங்., கட்சிக்கும் இடையிலான கடும் போட்டியில் 1990 – 91 வரையும் முதல்வராக இருந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
புதுச்சேரி: பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
புதுச்சேரி: எம்பி வைத்திலிங்கம் குற்றசாட்டு

மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி, இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் 7 பேர் கொண்ட புதிய வக்பு வாரியத்தை அரசு நியமித்துள்ளது. இதில் முதல்முறையாக 2 இந்துக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வைத்திலிங்கம், குறிப்பாக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது எனக் குற்றஞ்சாட்டினார்.
News March 11, 2026
புதுச்சேரி: போலீசார் கூண்டோடு மாற்றம்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், நேற்று இரவு ஜார்கண்டை சேர்ந்த ஹர்திக் ஜா என்பவர் உள்ளே புகுந்து தூங்கிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அப்போது ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மெத்தனமாக செயல்பட்டதால், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


