News April 13, 2024
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News February 10, 2026
முதுகுளத்தூர் வீரர் உலக கோப்பை போட்டிக்கு தேர்வு

முதுகுளத்தூரை சேர்ந்த இந்திய லங்காடி அணி தலைவர் தேவசித்தம் உலக கோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் மகாராஷ்டிரா, கார்நாடக, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 வீரர்கள் பூடான் நாட்டில் அக்டோபரில் நடைபெற உள்ள உலக கோப்பை லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக கோப்பை நடத்த ஆசிய லங்காடி கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
News February 10, 2026
ராமநாதபுரம்: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இருந்தால், பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி, பிற தேவையின் போது ஆதார் அவசியமாகும். இதற்காக நீங்க அலைச்சல் இல்லாமல் வாங்க எளியவழி உள்ளது. இங்கு <
News February 10, 2026
ராமநாதபுரம்: ஊர்க்காவல் படையில் வேலை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை & மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு. ஊர்க்காவல் படையில் (2 பெண்கள்) 52 பேரும், கடலோர பாதுகாப்பு படையில் 40 இளைஞர்களும் தேர்வு செய்யப்படுவர். 18-50 வயது – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். (பிப்.18 – தேர்வு) SHARE


