News March 26, 2024
முன்னாள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) இரவு நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக அவர் விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை நெல்லை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
Similar News
News October 27, 2025
திருநெல்வேலி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் உள்ள 55 வார்டுகளிலும் வார்டு சிறப்பு கூட்டங்கள் நாளை (28-10-25) செவ்வாய் கிழமையன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் தலைமையில் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறாது என மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது.
News October 27, 2025
நெல்லை: இனி வரிசைல நிக்க தேவையில்லை!

நெல்லை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News October 27, 2025
நெல்லை: தர்ப்பூசணி பழத்தில் முருகர்

கந்த சஷ்டி திருவிழா முன்னிட்டு இன்று மாலை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா நடைபெற இருக்கிறது. எனவே முருக பக்தர்கள் உற்சாகமுடன் முருகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சமையல் கலைஞர் செல்வகுமார் தர்பூசணி பழத்தில் முருகரின் உருவத்தை வரைந்துள்ளார்.


