News October 17, 2025
முன்னாள் படை வீரர்கள் தொழில் முனைவராக ரூ.4 கோடி மாணியம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று விடுத்த செய்தி குறிப்பில், குமரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 45 முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்குவதற்கு 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர்கள் தொழில் முனைவோராக மாற விருப்பம் தெரிவித்த மாவட்டம் குமரி மாவட்டம் ஆகும் என்றார்.
Similar News
News December 17, 2025
குமரி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

குமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 17, 2025
குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செம்பன்விளை, திக்கணங்கோடு, இரணியல், திங்கள்சந்தை, முட்டம், அம்மாண்டிவிளை, சாத்தன்விளை, திருநயினார்குறிச்சி, மணவாளக்குறிச்சி, நெய்யூர், சைமன்காலனி ஆகிய இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News December 16, 2025
குலசேகரம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு தேனீ வளர்ப்பு தொழிலாளி தீபுவின் மகன் அபிஷேக் (17)
பைக் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாடியிலுள்ள தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். இன்று காலையில் தாயார் கவிதா டீ கொடுக்க அவரது அறைக்கு சென்ற போது அபிஷேக் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


