News March 15, 2025
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் வரும் மார்ச்.20 ஆம் தேதி கலெக்டர் பவன் குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 12, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
கோவை தங்க கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

கோவை அருகே ரூ.1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் போலீசார் மேலும் இருவரை வாளையார் சோதனைச் சாவடியில் கைது செய்தனர். பாலக்காட்டை சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தை சேர்ந்த ரோஷன் என்போர் தங்கம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News September 12, 2025
கோவையில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி!

கோவை, தமிழக பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கு டிராக்டர் முதல் டிரோன் வரை வேளாண் கருவி பழுதுபார்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குழுக்கள் செப்.15, அக்.15, நவ.15, பெண்களுக்கு டிச.15–ஜன.14. மேலும் விவரங்களுக்கு: 0422-2472624, 9003631865.