News September 23, 2024
முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன் ஆட்சியர் அழைப்பு
முன்னாள் படைவீரர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோர் பயன்படலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார்
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தொடர்பு கொள்ளவும். திண்டுக்கல் நகரம், திண்டுக்கல் ஊரகம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளன.
News November 20, 2024
திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ➤திண்டுக்கல்: மாடு வளர்ப்போர் கவனத்திற்கு ➤நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த கலெக்டர் ➤இரவில் உலா வந்த 3 இளைஞர்கள்! வெளியான CCTV ➤அருள் இறங்கி ஆடிய கல்லூரி மாணவி ➤40 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் சேவை தொடக்கம் ➤எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம் ➤பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு.
News November 20, 2024
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.