News May 17, 2024

முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

image

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

FLASH: சேலம் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ விருது!

image

இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிற்பக் கலைத்துறையில் சாதனை படைத்த இவர், தஞ்சைப் பெரிய கோயிலின் பாம்பு சிற்பம் மற்றும் குடியாத்தத்தில் உள்ள 13 அடி உயர நடராஜர் சிலையையும் செதுக்கியவர். குடியரசு தினத்தை முன்னிட்டு இவரது கலைப்பணியைப் பாராட்டி மத்திய அரசு இந்த உயரிய விருதை அறிவித்துள்ளது.

News January 25, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 25, 2026

ரயில்களில் தீவிர பாதுகாப்பு சோதனை!

image

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாபு மற்றும் பாதுகாப்பு ஆணையாளர் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான போலீசார், ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர்.மேலும் பயணிகள் உடைமைகள், நடைமேடைகள்,பார்சல் அலுவலகம் மற்றும் ஓய்வறைகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடப்பட்டது.

error: Content is protected !!