News December 28, 2025
முன்னாள் எம்எல்ஏ வீட்டின் மீது கல்வீச்சு வாலிபர் கைது

அரக்கோணம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பவானி கருணாகரன். தோல் ஷாப் பகுதியில் வசிக்கிறார். நேற்று இரவு இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சின்னராசு தனது தாயுடன் சண்டை போட்டார். சண்டையை விலக்கி விடுமாறு பவானி கருணாகரனிடம் சின்னராசு கேட்டார். அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் எம்எல்ஏ வீட்டின் மீது ஆத்திரம் அடைந்து கல் வீசி உள்ளார். இதனால் சின்னராசுவை டவுன் போலீசார் இன்று (டிச.28) கைது செய்தனர்.
Similar News
News January 22, 2026
ராணிப்பேட்டை: தந்தைக்கு எமனான மகன்!

சோளிங்கர் அருகே ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (70). இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் செல்வம் (40) தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு நேற்று (ஜன.21) கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், செல்வம் தந்தையை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நரசிம்மன் இறந்தார். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.
News January 22, 2026
ராணிப்பேட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சம்பத்ராயன்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜி 51. அரக்கோணம் தாலுகாவில் நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று ஜன.21ம் தேதி மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நெமிலி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.