News November 13, 2024
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. சக்கரபாணி மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அதிமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறினர். இதையடுத்து வழக்கு வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News August 14, 2025
விழுப்புரத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விழுப்புரத்தில் இன்று (ஆக.14) கோட்டக்குப்பம் நகராட்சியில் முஸ்லிம் தொடக்கப்பள்ளி, வல்லம் வட்டாரத்தில் டேனிமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ராஜா மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் ஆவணிப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் நன்னாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி,செஞ்சி வட்டாரத்தில் ந.பி.பெற்றான் அரசு உயர்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். ஷேர் பண்ணுங்க
News August 14, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.14) கோட்டக்குப்பம் நகராட்சியில் முஸ்லிம் தொடக்கப்பள்ளி, வல்லம் வட்டாரத்தில் டேனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ராஜா மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் ஆவணிப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் நன்னாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, செஞ்சி வட்டாரத்தில் ந.பி.பெற்றான் அரசு உயர்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது
News August 13, 2025
சுதந்திர தினம்: மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுகொண்டுள்ளார்.