News March 28, 2024

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சிறப்பு வரவேற்பு

image

திருச்சியில் பல்வேறு அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று திருச்சி வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள், விஜயபாஸ்கர், பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

Similar News

News February 4, 2026

திருச்சி: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (33). இவர் நேற்று மேலவாளாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் சேகர் (50) என்பவரை கைது செய்தனர்.

News February 3, 2026

திருச்சி: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

திருச்சி: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!