News January 1, 2025
முன்னாள் அமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்து

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சியினர் சந்தித்தனர். தொடர்ந்து அவருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News August 13, 2025
நாமக்கல்: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK NOW

நாமக்கல் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 13) ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News August 13, 2025
நாமக்கல் முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில், இதற்கிடையே நேற்று(ஆக.12) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.