News March 1, 2026
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்..

முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாள் இன்று. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்துடன் அரசியல் களம் புகுந்தவர், சென்னை மேயர், MLA, அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக உள்ளார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்களும், திமுக தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 9, 2026
உதயநிதியின் அரசியலுக்காக நடந்த கலவரம்: ஆதவ்

கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ளதாக CBI அதிகாரிகளிடம் கூறியிருந்ததை பற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உதயநிதியின் அரசியலுக்காக செந்தில் பாலாஜி, அன்பில் வழியே நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிச்செயல் தான் கரூர் சம்பவம் என கூறியுள்ளார். அவர்கள் சின்னதாக கலவரம் செய்ய நினைத்ததாகவும், ஆனால், அது அவர்களுக்கே பின்விளைவை ஏற்படுத்திவிட்டது எனவும் பேசியுள்ளார்.
News April 9, 2026
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவில் ஊறவைத்து, காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி அருந்தவும். இப்படி தினசரி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் கட்டுப்படும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News April 9, 2026
புள்ளி, கமாவுக்காக வேட்புமனு நிராகரிப்பு: வேல்முருகன்

தவாக சார்பாக போட்டியிடும் 20 பேரின் வேட்புமனுக்கள், வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ECI-யிடம் அவர் புகாரளித்துள்ளார். குறிப்பாக, புள்ளி வைக்கவில்லை, கமா போடவில்லை என்று கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என தெரிவித்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை 20 தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


