News March 26, 2025
முத்துப்பேட்டை :போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டு பேரணியாக வந்தபோது இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தடுத்து நிறுத்தி விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையனை தள்ளினார். இதனைக்கண்ட மக்கள் கூச்சலிட்டனர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 17, 2025
திருவாரூர்: கீழவீதியில் விஜய் பிரச்சாரம்!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் செப்.,20-ம் தேதி சனிக்கிழமை திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறையிடம் நேற்று தவெகவினர் மனு அளித்த நிலையில் இன்று காவல்துறை சார்பில் கீழ வீதி பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 16, 2025
திருவாரூர்: தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

திருவாரூர்..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <