News April 24, 2024

முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேகம்

image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீரால் கோபுர கலசங்களுக்கு அபிஷேகமும் , சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 2, 2026

தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 2, 2026

விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24), இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் வலி தாங்க முடியாமல் மனவேதனையில் இருந்த பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

News January 2, 2026

தூத்துக்குடி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE

error: Content is protected !!