News October 22, 2025

முத்தமிழ் முருகவேல் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

image

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த, ஓட்டேரியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தமிழ் முருகவேல் முருகர் கோயிலில் இன்று (அக் 22) கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. நாளை அக். 22 முதல் 27 வரை கந்த சஷ்டி பூஜைகள் நடைபெறும். மேலும் அக் 27 ம்தேதி சூரசம்காரமும், 28ம் தேதி முருகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News October 22, 2025

செங்கல்பட்டு: தேள் கொட்டி விவசாயி பலி

image

செய்யூர் அடுத்த, வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், விவசாயியான இவர் கடந்த அக். 5-ந்தேதி, காலை தனது நிலத்தில் விவசாய பணி மேற்கொண்டிருந்தார். அப்போது தேள் ஒன்று பாண்டியனின் வலது கையில் கொட்டியுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 22, 2025

செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!