News August 23, 2025
முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணியளவில் ஆஞ்சநேய பகவானுக்குப் பலவித வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Similar News
News August 24, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரூ.5.00 ஆகவே நீடிக்கிறது.
News August 24, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் (9442256423), வேலூர் – ரவி (9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – டேவிட் பாலு ( 9486540373), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News August 23, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரூ.5.00 ஆகவே நீடிக்கிறது.