News April 1, 2024
முதுமலை யானைகள் முகாமில் கவர்னர் ரவி

நீலகிரிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (மார்ச் 31) மாலை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடும்பத்துடன் சென்றார். யானைகளுக்கு உணவு அளித்தார். பின்னர் யானைகள் பராமரிப்பு குறித்து ஆஸ்கர் விருது பெற்ற பாகன் பொம்மன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். முன்னதாக வனத்துறை வாகனத்தில் காட்டுக்குள் சவாரி சென்றார்.
Similar News
News September 19, 2025
ஊட்டியில் அரசு பஸ் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி!

ஊட்டி நொண்டிமேடு பகுதியில் இன்டர்லாக் கற்களால் ஆன சரிவான சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்று முன்தினம் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தால், அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News September 19, 2025
நீலகிரியில் 4 நாள் மூடப்படுகிறது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வரும் செப்.23 முதல் 26 வரை 4நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பூங்காவின் மேம்பாட்டிற்காகவும் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
News September 19, 2025
நீலகிரி:தொடர்கிறது 12பேரை கொன்ற யானையை பிடிக்கும் பணி!

கூடலுார் ஓவேலியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை டிரோன் கேமரா மூலம் காட்டு யானை இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ”யானையை பிடிக்கும் பணியில், 140 பேர் ஈடுபட்டுள்ளனர். மாலை வரை, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், மயக்க ஊசி செலுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், நாளை (இன்று) இப்பணி மீண்டும் தொடரும்,” என்றார்.