News January 8, 2026
முதுநிலை பார்வையாளர்கள் நியமனம்: காங்.,

தமிழகத்தில் தேர்தல் பணிகளை காங்., கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலையொட்டி, தமிழகம்- புதுச்சேரிக்கு காங்கிரஸ் முதுநிலை பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோரை நியமித்து கே.சிவேணுகோபல் அறிவித்துள்ளார். அதேபோல், அஸாமுக்கு 3 பேர், கேரளாவுக்கு 4 பேர், மேற்கு வங்கத்துக்கு 3 பேர் முதுநிலை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 27, 2026
அப்போ டார்ச் லைட்டை OFF பண்ண வேண்டியது தானா?

டார்ச் சின்னம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட கமலின் மநீம விரும்புகிறது. இதுகுறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்திருந்தது. ஆனால் ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும், உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் டார்ச் லைட்டை ON செய்யவே முடியாதா என மநீம தரப்பு தவித்து வருகிறது.
News January 27, 2026
ஜன நாயகன் பிப்.6-ம் தேதி ரிலீஸா?

ஜன நாயகனுக்கு U/A 16+ சான்றிதழை CBFC வழங்கிவிட்டதாகவும், வரும் பிப்.6-ம் தேதி படம் ரிலீஸ் என்றும் SM-ல் சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை என்பதே உண்மை. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு CBFC கடுமையாக வாதிட்டது. இந்நிலையில் திடீரென இப்படி செய்ய வாய்ப்பே இல்லை என சட்ட நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
News January 27, 2026
நெய் vs எண்ணெய் எதை பயன்படுத்த வேண்டும்?

நெய் மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டையும் மிதமான அளவில் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது. பொதுவாக, ஒரு நாளைக்கு 3-4 டீஸ்பூன் (15-20 மிலி) க்கும் குறைவான நெய் + எண்ணெயை எடுத்துக் கொள்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். வறுவல்களுக்கு நெய் பயன்படுத்துவது சுவையையும் நன்மையும் தரும், அதே நேரத்தில் வழக்கமான சமையலுக்கு (குழம்பு, பொரியல்) ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தலாம்.


