News April 19, 2025
முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 8, 2025
திருச்சி: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

திருச்சி மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
திருச்சி: ஆதிதிராவிட, பழங்குடியினர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியை சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பொது நர்சிங் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
திருச்சி: கலால் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாநகரில் இயங்கி வரும் உரிமம் பெற்ற மது விற்பனை கூடங்களில் உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த வேண்டுமென, திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.