News August 10, 2025

முதுகலை மாணவர்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு!

image

சேலம் வின்சென்டில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 17 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-2026ம் கல்வியாண்டிற்கு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு, சேலம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள 450 முதுகலை இடங்களில் சேர, 4,145 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாளை முதல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.

Similar News

News August 12, 2025

நாய் கடியில் சேலம் முதலிடம்! உடனே CALL பண்ணுங்க!

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 12, 2025

சேலம்: நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனியில் அமைந்துள்ள கிழக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.13) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!