News October 17, 2025

முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி முகமை பழைய கட்டிடத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 17.11.2025க்குள் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

சங்கரன்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் அக்டோபர் 2025 இன் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2025 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்திற்கு சங்கரன்கோவில் வருவாய் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News October 18, 2025

மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுங்கள் – ஆட்சியர்

image

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோர், பொதுமக்களுக்கு ஒலி, மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தீபாவளி அன்று காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சரவெடிகளைத் தவிர்த்து, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள் அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

News October 17, 2025

தென்காசி வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்  https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்

error: Content is protected !!