News March 28, 2025

முதியவர் மயங்கி விழுந்து பரிதாப பலி

image

திருத்தணி கமலா தியேட்டர் அருகே, 45 வயது மதிக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு உயர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரது அடையாளம் தெரியாததால் காவல்துறை விசாரித்து வருகின்றது.

Similar News

News March 31, 2025

தம்பதி தூக்கிட்டு தற்கொலை

image

பெரியகுப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ்-இந்திரா தம்பதியினர். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமான நிலையில், மகன் சாம்ராஜுடன் வசித்து வந்தனர். 1 வருடமாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் மிகவும் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்க சென்றவர்கள் காலையில் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தப்பொழுது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!