News November 29, 2025
முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் வந்து வருகிற 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் பொது விநியோகத்திட்டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.இதனை முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.
Similar News
News December 1, 2025
திருப்பூர்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
திருப்பூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இந்த லிங்கை<
News December 1, 2025
திருப்பூரில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்!

திருப்பூரில் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த மாதம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையின் போது பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சிங் என்பவரும் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.


