News November 29, 2025
முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் வந்து வருகிற 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் பொது விநியோகத்திட்டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.இதனை முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.
Similar News
News December 3, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.04) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சேவூர், குளத்துப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம், அசநல்லிபாளையம், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 3, 2025
திருப்பூர் மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News December 3, 2025
காங்கேயம் அருகே சோக சம்பவம்!

காங்கேயம் அருகே நத்தக்காடையூர், மன்றாடியார்நகரை சேர்ந்தவர் பிரியா (30). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு, 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் தந்தை வீட்டில் வசித்து வந்த பிரியா, தன்னை கவனிக்க ஆள் இல்லாத விரக்தியில், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதில் பிரியா உயிரிழந்த நிலையில், 8 வயது மகள் ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


