News April 18, 2024

முதியவரை காப்பாற்றிய தலைமை காவலர்

image

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு ஏதுமின்றி சாலையோரம் முதியவர் ஒருவர் படுத்து கிடந்துள்ளார். மயிலம் காவல் நிலைய தலைமை காவலர் சங்கரன், அவருக்கு தேவையான உணவுகளை வாங்கி கொடுத்து தனது சொந்த செலவில் இன்று சொந்த ஊரான ஆத்தூர் அடுத்த சிறுவாச்சூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 4, 2025

விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!

News November 4, 2025

விழுப்புரம்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விழுப்புரத்தில் மட்டும் 60 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

விழுப்புரம்: நீரில் மூழ்கி சிறுவன் பலி!

image

விழுப்புரத்தைச் சோ்ந்த சிறுவன் தனது நண்பா்களுடன் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். விழுப்புரம் பானாம்பட்டு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த விமல் என்பவரின் மகன் சுஜித் (14). விழுப்புரத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா் . அணைக்கட்டு பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

error: Content is protected !!