News April 2, 2024
முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகை வழங்கி விழிப்புணர்வு.

ஆரணி பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு முதல்முறை வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலதாளம் மற்றும் சீர்வரிசை தட்டுடன் சென்று பேருந்தில் பயணித்த முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகையை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Similar News
News August 15, 2025
தி.மலை: EPFO நிறுவனத்தில் ரூ.45,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி.மலை மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <
News August 15, 2025
காட்டாற்று வெள்ளத்தில் பலியானோருக்கு அரசு நிதி உதவி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பருவதமலை
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இந்திரா (53), தங்கத்தமிழ் (34) என்ற இரு பெண்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவின் பேரில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
News August 15, 2025
BREAKING: தி.மலை- வரதட்சணை கொடுமையால் தற்கொலை?

ஆரணி அருகே லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரோகிணி என்பவர் திருமணமாகி 8 மாதம் மட்டுமே ஆகும் நிலையில், இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன் லோகநாதனின் பெற்றோர் வரதட்சணை கேட்டதாக கூறப்படும் நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.