News December 29, 2024
முதல் முறையாக மது இல்லா கொண்டாட்டம்

மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, நீலகிரி சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில், ஊட்டியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும், ஹோட்டல் தமிழ்நாட்டில் இம்முறை முதல் முறையாக புத்தாண்டு விழா நடக்கிறது. மேலும், வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
Similar News
News November 15, 2025
JUSTIN குன்னூரில் மின்சாரத்துறை முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதலா துணை மின் நிலையத்துக்கு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, குன்னூர் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக, மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் மின் வினியோகம் தொடர்ந்து இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
நீலகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

குன்னூரில் உள்ள ஜகதலா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் நகரம் சிம்ஸ் பார்க் அருவங்காடு ஒசட்டி பாய்ஸ் கம்பெனி,ஓட்டு பட்டறை, ராஜாஜி நகர், காட்டேரி, மவுண்ட் பிளசென்ட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
குன்னூர் மக்களே: கவனமா இருங்க!

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோரங்களில், 3மாதங்களுக்கு பிறகு யானை கூட்டம் தற்போது மீண்டும் பர்லியார் பகுதிக்கு வர துவங்கியுள்ளன. நேற்று காலை, 7மணியளவில், பார்லியார் அருகே சாலை ஓரத்தில் 2குட்டிகளுடன், 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பர்லியார் குடியிருப்பு மற்றும் மலைப் பாதையில் உலாவரும் என்பதால் மக்கள அச்சத்தில் உள்ளனர். மித வேகத்தில் வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


