News January 31, 2026
முதல் பெண் DCM.. யார் இந்த சுனேத்ரா பவார்?

MH-ன் முதல் பெண் DCM-ஆக பதவியேற்கும் சுனேத்ரா பவார் அரசியலில் ஆக்டிவாக இருப்பவர். கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், இவருக்கு ராஜ்யசபா MP பதவி வழங்கப்பட்டது. 2010-ல் Organic Farming-காக அமைப்பை தொடங்கி ‘கிரீன் வாரியர்’ விருது பெற்றார். பிறகு பிரான்சில் உலக தொழில்முனைவோர் மன்றத்தின் சிந்தனை குழு உறுப்பினராக இருப்பது, கட்சிக்காக பிரசாரங்கள் செய்வது என களப்பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.
Similar News
News February 17, 2026
தவெக தேர்தல் அறிக்கை ரெடி.. 27-ம் தேதி வெளியிட திட்டம்

2026 தேர்தல் நெருங்குவதால் மக்களின் பார்வையை தவெக பக்கம் திரும்ப விஜய் தீவிரமாக திட்டம் வகுத்து வருகிறாராம். அதன்படி வரும் பிப். 27-ம் தேதி தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலவசங்களை தவிர்த்து, மக்களை கவரும் அம்சங்களுடன் அறிக்கை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவின் இலவசங்கள் முன் TVK தேர்தல் அறிக்கை தாக்கு பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News February 17, 2026
நம்பிக்கை நாயகன் SK-வுக்கு பிறந்தநாள்

சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நாயகன். கனவும் அதற்கான உழைப்பும் இருந்ததால் இங்கு எதுவும் சாத்தியம் என சாமனியனுக்கு உணர்த்திய நாயகன். கேலி கிண்டலுக்கு வெற்றி புன்னகையால் பதில் அளித்து வரும் நம்பிக்கை நட்சத்திரம். போஸ் பாண்டி, மேஜர் முகுந்த், செழியன் என பெயர் சொல்லும் கதாபாத்திரங்களால் மக்களின் மனங்களை வென்ற சிவகார்த்தியேகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
News February 17, 2026
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படும்.


