News December 27, 2024

முதல் சீக்கிய பிரதமர்

image

2004ஆம் ஆண்டு காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த நிலையில், சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், 13வது பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரான அவர், தொடர்ந்து 2 முறை ( 2004 முதல் 2014 வரை ) அப்பதவியை வகித்தார். இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்த 4வது நபர் மன்மோகன் சிங் என்ற பெருமையை பெற்றவர்.

Similar News

News August 16, 2025

திமுகவில் ஐக்கியம்… சர்ச்சைக்கு தம்பிதுரை முற்றுப்புள்ளி

image

திமுகவில் ஐக்கியம் என்ற சர்ச்சைக்கு தனது செயல்பாடு மூலம் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் தம்பிதுரை முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு விழாவில் அவர் பேசுகையில், கூட்டணி கட்சிகள் இருந்தாலும், 2026-ல் EPS தனித்து ஆட்சி அமைப்பார் என்று சூளுரைத்துள்ளார்.

News August 16, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

கேள்விகள்:
1. இந்தியாவில் எந்த மாநிலம் ‘மசாலாப் பொருள்களின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது?
2. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
3. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது?
4. மியான்மர் நாட்டின் பழைய பெயர்?
5. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல் அது என்ன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.

News August 16, 2025

தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு?

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் காலை முதல் ED சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அத்துடன், அவரது அறைக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.

error: Content is protected !!