News March 23, 2024

முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் வருகை

image

திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நாகை மக்களவை வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

திருவாரூர்: சாலையை கடக்க முயன்றவர் பலி

image

மன்னார்குடி மேலச்சேரியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (78), இவர் நேற்று மாலை திருத்துறைபூண்டி மெயின் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற செந்தில்குமார் (47) என்பவர் ஒட்டி வந்த பைக் பிச்சைக்கண்ணு மீது மோதியதில், அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அங்கு வந்த கோட்டூர் போலீசார் பிச்சைக்கண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

திருவாரூர்: மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்

image

திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 0 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாளை புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்று பயனடைய ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.<>udyamimitra<<>>.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!