News June 20, 2024
முதல்வர் பதவி விலக வேண்டும் – இபிஎஸ்
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை என்று தெரிவித்த அவர், இறந்தவர்கள் அடித்தட்டு மக்கள் என கூறினார். இந்நிலையில், கள்ளச்சாராயம் எதிரொலி காரணமாக இணையத்தில் #Resign_Stalin டிரெண்டாகி வருகிறது.
Similar News
News November 20, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – அண்ணாமலை
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
கள்ளக்குறிச்சி விவகாரம்: இபிஎஸ் வரவேற்பு
அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.