News March 21, 2024
முதல்வர் தேர்தல் பிரச்சார இடம் அமைச்சர் ஆய்வு

நெல்லை, கன்னியாகுமரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 25ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நாங்குநேரி டோல்கேட் அருகில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (மார்ச் 20) மாலை ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News January 26, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News January 26, 2026
நெல்லை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

நெல்லை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க
News January 26, 2026
நாங்குநேரியில் நாளை மின்தடை அறிவிப்பு

நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாங்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.


