News September 8, 2025

முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்

image

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி. வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Similar News

News September 9, 2025

தர்மபுரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

News September 9, 2025

தர்மபுரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

தர்மபுரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<>உங்களுடன் ஸ்டாலின்<<>>’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News September 9, 2025

தர்மபுரி: பெயர்க் காரணம் தெரியுமா?

image

தர்மபுரி என்ற பெயருக்குப் பின்னால் இருவேறு கதைகள் உள்ளன. மகாபாரதக் காலத்தில், பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன், வனவாசத்தின்போது இங்கு தங்கி ஆட்சி செய்ததால், அவரது பெயரால் ‘தர்மபுரி’ எனப் பெயர் வந்திருக்கலாம் எனவும், பண்டைய காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் அதியமான், நீதிக்கும், தர்மத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்ததால், ‘தர்மபுரி’ என அழைக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!