News April 1, 2026

முதல்வரின் நெல்லை பிரச்சார விபரம் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News April 7, 2026

நெல்லை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>இந்த இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 7, 2026

நெல்லையில் நாளை TVK தலைவர் விஜய் பிரசாரம்

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள நெல்லை காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரண்டு இடங்களை தேர்வு செய்து மனு அளித்த நிலையில் போலீசார் ஆய்வு செய்து அனுமதி வழங்கி உள்ளனர்.

News April 7, 2026

நெல்லை: விவசாயி வெட்டிக் கொலை; குற்றவாளிக்கு தண்டனை

image

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2019ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராஜகோபால் (56) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக அம்பை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கணேசனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!