News December 15, 2024

முதல்வரின் கூடுதல் தனிச்செயலர் உயிரிழந்தார்

image

புதுச்சேரி மாநிலம் முதலமைச்சர் ரங்கசாமியின் கூடுதல் தனிச்செயலர் தமிழ் அரிமா இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Similar News

News September 12, 2025

புதுச்சேரி அரசு பள்ளியில் கணித ஷார்ட்கட் பயிற்சி

image

புதுச்சேரி மாநிலம், மண்ணாடிபட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புராணசிங்குபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிஎம்ஷ்ரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆய்வகத்தில் கணிதத்தில் ஷார்ட்கட் உத்திகளின் பயிற்சி மற்றும் கணித வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இதில் நல்லாசிரியர் விருது பெற்ற கணித விரிவுரையாளர் திருமுருகன் எளிய முறையில் பயிற்சி அளித்தார்.

News September 12, 2025

புதுவை: சுகாதார ஊழியர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

image

புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மொத்தம் 144 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 3-ம்m தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செப்.24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கிறது.

News September 12, 2025

புதுவை: நீட் தேர்வு தர வரிசை பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் 800-க்கு 646 மதிப்பெண்கள் எடுத்து புதுவையில் ஆயுஸ்நாத் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 1,445 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!