News February 16, 2025

முதல்வரின் காக்கும் கரங்கள் கலெக்டர் தகவல்

image

முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் வருகிற பிப்ரவரி 20-ம் தேதி மாலை 3 மணியளவில் முகாம் நடைபெறவுள்ளது.  எனவே இதில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

BIG NEWS: வேலூரை குறிவைக்கும் பாஜக?

image

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூரில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர், குடியாத்தம், ஆகிய தொகுதிகளில் பாஜக-விற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News December 14, 2025

வேலுார் வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு!

image

தேசிய சட்ட பணிகள் ஆணை குழு & வேலுார் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வேலுார், மூஞ்சுர்ப்பட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கருணாகரன் (55) என்பவர், சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஆனார். அவரது குடும்பத்தினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாயை யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க நேற்று லோக் அதாலத் கோர்ட் உத்தரவிட்டது.

News December 14, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!