News January 16, 2026
முதல்முறையாக Sunday-ல் பங்குச்சந்தை

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தில் (காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News February 11, 2026
Cab-ல் தனியாக செல்லும் பெண்களே.. NOTE THIS

பெண்களே, Cab-ல் பயணிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் வந்தால் பதற்றமடைய வேண்டாம். 112 என்ற நம்பருக்கு டயல் செய்தால் போதும். 10 நிமிடங்களில் லொகேஷனை டிராக் செய்து நீங்கள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் வந்துவிடும். ‘112 India APP’ செயலியையும் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எப்போது பிரச்னை வந்தாலும், இது உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News February 11, 2026
10 நாள்களில் வெள்ளி விலை ₹50,000 குறைந்தது

<<19107790>>தங்கம் விலை<<>> ஏற்ற இறக்கத்தில் உள்ள போதிலும், கடந்த 2 நாள்களாக வெள்ளி விலை மாற்றமின்றி(கிராம் ₹300) விற்பனையாகிறது. கடந்த 31-ம் தேதி கிலோ ₹3,50,000-க்கு விற்பனையான பார் வெள்ளி 10 நாள்களில் ₹50,000 சரிந்து ₹3,00,000 ஆனது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலை தொடர்ந்தால் வெள்ளி விலை மேலும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, முதலீடு நோக்கில் வாங்குவோர் சற்று சிந்தித்து செயல்படுங்கள்.
News February 11, 2026
இந்தியாவில் ஊழல் குறைந்தது.. ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. 2024-ல் ஊழல் குறியீட்டில் 182 நாடுகளில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, 1 பாயிண்ட் குறைந்து 2025-ல் 91-ல் உள்ளது. டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் ஊழல் குறைந்த நாடுகளாக உள்ளன. சூடான், சோமாலியா ஊழல் மிகுந்த நாடுகளாக உள்ளன. மேலும், டிரம்ப் ஆட்சிக்கு பின் USA-ல் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?


