News March 4, 2026

முதல்முறையாக இந்த Point-ஐ விஜய் பேசவில்லை..

image

இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும், TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவந்தார் விஜய். அத்துடன் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பலமுறை வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பாயிண்ட்டை தஞ்சை கூட்டத்தில் பேசாமல் ஸ்கிப் செய்திருக்கிறார் விஜய். இது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து?

Similar News

News April 14, 2026

AI சாட்பாட் உரையாடல்.. தற்கொலையில் முடிந்த சோகம்

image

அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது நபர் AI சாட்பாட் உடன் பல வாரங்கள் தொடர்ந்து பேசியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவியை பிரிந்த பிறகு ஆறுதல் தேடி Gemini உடன் பேசத் தொடங்கியுள்ளார். ஆனால், AI அவரை எச்சரிக்காமல் கற்பனைக்கு வலுவூட்டும் விதமாக ரிப்ளை கொடுத்து வந்துள்ளது. சுமார் 47,000 மெசேஜ்கள் வரை AI உடன் பேசிய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

News April 14, 2026

தமிழ்நாடு 234 தொகுதிகளை பெற்றது எப்படி?

image

1963-ல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, தமிழகத்துக்கான (அன்று மெட்ராஸ் மாநிலம்) MP-க்கள் எண்ணிக்கை 41-லிருந்து 39 ஆகக் குறைந்தது. ஒரு MP தொகுதிக்கு 5 MLA தொகுதி என்ற அடிப்படையில், 195 சட்டப்பேரவை தொகுதிகளாக குறைந்தது. இதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவமும் குறையும். இதை ஈடுகட்ட 1 MP தொகுதி X 5 என்பதை 1 MP தொகுதி X 6 என சீரமைப்பு கமிஷன் மாற்றியதாலேயே 234 தொகுதிகள் நமக்கு கிடைத்தது.

News April 14, 2026

உதயநிதிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு!

image

உதயநிதி வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதை IT விசாரிக்க வேண்டுமெனவும் குமரேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 2021 தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ₹7.36 கோடி முதலீடு, இம்முறை இடம்பெறவில்லை என அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!