News May 16, 2024

முதலை கடித்து பராமரிப்பாளர் காயம்

image

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணி செய்பவர் விஜய் (23). மூன்று மாதங்களாக சதுப்புநீர் முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவரை இன்று முதலை ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த விஜய் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயின் தந்தை ஏசு நெருப்பு கோழி பராமரிப்பில் நிரந்தர பணியாளராக வேலை பார்கிறார்.

Similar News

News December 31, 2025

BREAKING: செங்கல்பட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

image

செங்கல்பட்டு மாவட்டம் பயனூர் அருகே வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.80,000 பணம், ஆவணகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் நிலையில், ரெய்டு நடந்துள்ளது.

News December 31, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (31.12.2025) புத்தாண்டு நள்ளிரவு பாதுகாப்புப் பணிகளுக்காக அனைத்துக் காவல் நிலையங்களிலும் இரவு ரோந்து அதிகாரிகள் (Night Rounds Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுக்குப் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News December 31, 2025

செங்கல்பட்டு காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

image

புத்தாண்டு கொண்டாட்டம் 2026 முன்னிட்டு இன்று மாலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான
இ சி ஆர்,ஓ எம் ஆர்,
மேலும் முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டமானது
1/1/ 2026 அதிகாலை 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிக்ககூடாது.

error: Content is protected !!