News January 2, 2026
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்த பங்குச்சந்தை

வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து, 85,762-க்கும், நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 26,328-க்கு வர்த்தகமாகியுள்ளது. மேலும் VI, HDFC Bank, Reliance, Coal India நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம் ITC, Shriram Finance, Nestle உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு இன்று சரிவை சந்தித்துள்ளன.
Similar News
News February 3, 2026
இசையமைப்பாளர் வெங்கடேஷ் காலமானார்.. குவியும் இரங்கல்

பழம்பெரும் இசையமைப்பாளர் <<19038748>>SP வெங்கடேஷ்(70)<<>>, சென்னையில் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து SM-ல் உருக்கமாக பதிவிட்ட பாடகி சுஜாதா மோகன், இசை உலகிற்கு பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மெல்லிசைகள் அழியாமல் நிலைத்திருக்கும் எனவும், SP வெங்கடேஷ் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். SP வெங்கடேஷின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.
News February 3, 2026
விலக்கி வைக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை: எஸ்.வி.சேகர்

அண்ணாமலை விலகவில்லை, விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். எப்போதும் பொய்யாக சொல்லும் அண்ணாமலை சுயநலக்காரர் என்றும், அவர் பணியாற்றினால் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெல்ல முடியாது என்பதை அறிந்து, டெல்லி தலைமை அறிவுறுத்தலின்பேரில் விலகி இருக்கக்கூடும் எனவும் கூறினார். மேலும், வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் தோல்வி அடைவார் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 3, 2026
NDA + விஜய் கூட்டணி… நயினார் முடிவு இதுதான்!

திமுக, அதிமுக கூட்டணிகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டன. விஜய்யும் தனித்தே களம் காணும் சூழல் உள்ளது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் சேர்ப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தங்களுடன் விஜய் கூட்டணிக்கு வந்தால் தவெகவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக, பாஜகவை மட்டுமின்றி அதிமுகவையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ள விஜய் இதற்கு சம்மதிப்பாரா?


