News January 26, 2026

முதலில் கள்ள டிக்கெட் ஊழலை தடுங்க விஜய்: TTV தினகரன்

image

அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் விமர்சித்ததற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவரிசையில், TTV தினகரனும் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கள் கட்சித் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு எங்களையே ஊழல் கட்சி என கூறுவதா என கேள்வியெழுப்பியுள்ளார். முதலில் உங்கள் திரைப்படத்தின் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

FLASH: ஜாம்பவானை வீழ்த்தி சாம்பியனான அல்காரஸ்

image

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (22) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்னிஸ் ஜாம்பவானான ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்காரஸ் முத்தமிட்டார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. நீங்களும் வாழ்த்தலாமே!

News February 1, 2026

அரசு மாதிரிப் பள்ளிகளில் நாளை முதல் அட்மிஷன்

image

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் இம்மாதம் 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

News February 1, 2026

உப்புக்கு Expiry Date இருக்கா?

image

உப்பில்லாமல் உணவின் சுவை கெட்டுப்போகலாம், ஆனால் உப்பு எப்போதும் கெட்டுப்போகாது. சுத்தமான உப்பில் பாக்டீரியா மற்றும் கிருமிகளால் வளரவே முடியாது. அதில் இருக்கும் அயோடின் காலப்போக்கில் கரைந்துபோய், அதன் சத்து குறையுமே தவிர, மற்றப்படி உப்பு கெட்டுப்போகாது. எவ்வளவு நாள்களில் அந்த சத்து குறையும் என்பதை சுட்டிக்காட்டவே உப்பு பாக்கெட்டுகளில் Expiry Date கொடுக்கப்படுகிறது. பலருக்கும் தெரியாது SHARE THIS.

error: Content is protected !!