News December 7, 2025
முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர், 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றமும், மன அழுத்தமும் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநலன் ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.
Similar News
News March 30, 2026
₹4.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. காலை முதலே சரிவில் இருந்த பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தக நாளின் முடிவில் நிஃப்டி 488 புள்ளிகள் குறைந்து 22,331 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 1,635 புள்ளிகள் சரிந்து 71,947 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. இதனால் ஒரேநாளில் முதலீட்டாளர்கள் சுமார் ₹4.13 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
News March 30, 2026
வெடிகுண்டு மிரட்டல் மன்னன் கைது!

நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவந்த ஸ்ரீனிவாஸ் லூயிஸ் (47) என்பவரை போலீசார் மைசூரில் கைது செய்துள்ளனர். அவர் பள்ளிகள், ஐகோர்ட்கள் மற்றும் அரசுக் கட்டடங்களில் குண்டு வைத்துள்ளதாக கூறி 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். அவர் வேலையில்லாத ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 30, 2026
EB பில்லை குறைக்க AC-க்கான கூல் டிப்ஸ்

*AC-யை 24 டிகிரியில் இயக்கவும். இது EB பில்லை 6% வரை குறைக்கும் *AC-யின் இன்னர், அவுட்டர் யூனிட்களை சுத்தம் செய்யவும். 3 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யவும் *AC ரூமில் ஜன்னல், கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என செக் செய்து கொள்ளவும் *AC-யுடன் சீலிங் ஃபேனை குறைந்த ஸ்பீடில் பயன்படுத்தவும் *ரிமோட்டில் மட்டும் Off பண்ணாமல், மெயின் சுவிட்சையும் Off செய்யவும். SHARE IT.


