News December 31, 2025
முதலிடம் பிடித்த மாணவனை பாராட்டிய ஆட்சியர்

2025-2026-ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா (களிமண் சிற்ப வேலைபாடு) போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவன் சத்தீஸ்வரனை மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேற்று பாராட்டினார். அப்போது தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அதிகாரப்பட்டி பள்ளியின் தலைமையாசிரியர் உடன் இருந்தனர்.
Similar News
News January 9, 2026
அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜனவரி 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டால் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலக மின் அஞ்சல் ddtextilessalemregional@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
News January 9, 2026
தருமபுரியில் மாவட்ட அளவிலான பயிலரங்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் சார்பில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு HPV தடுப்பூசிக்கான மாவட்ட பயிலரங்கம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சதீஸ் மற்றும் தேசிய நல குழும இயக்குநர் அருண்தம்புராஜ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். உடன் அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.
News January 9, 2026
தருமபுரி: அதிரடி சோதனையில் அதிர்ச்சி சம்பவம்

ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று (ஜன.8) ரோந்து பணி மேற்கொண்டனர். ஏர்கோல்பட்டி பகுதியில் சிலர் சூதாடுவதாக வந்த தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த செல்வம் (37), சதீஸ் (27), பாலு (58), குழந்தை கவுண்டர் (51), மாயக்கண்ணன் (48), கோவிந்தன் (60), முருகன் (53) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.35,330 பறிமுதல் செய்தனர்.


