News December 1, 2025
முதலமைச்சர் நிவாரண உதவித்தொகை வழங்கல்

திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்(24.11.2025) அன்று நடந்த சாலை விபத்தில் இறப்பு ஏற்பட்டுள்ள 6 நபர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.18 இலட்சமும், பலத்த காயம் அடைந்த 35 நபர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.35 இலட்சமும் மற்றும் லேசான காயம் அடைந்த 18 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.9 லட்சம் மொத்தம் 59 நபர்களுக்கு ரூ.62 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
தென்காசி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

தென்காசி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <
News December 4, 2025
தென்காசி: கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி காசிநாதபுரத்தில் சாமி கும்பிடுவதில் வரி வசூல் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மணிவேல் என்பவர் 2015-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊர்தலைவர் விநாயகம், உலகநாதன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
News December 4, 2025
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் தனித்துவமான வேளாண் பொருட்களை கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. புளியங்குடி (தென்காசி) எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


