News August 6, 2025
முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான QR குறியீடு அறிமுகம்

முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த போட்டிகளுக்கான முன்பதிவு “க்யூ ஆர்” குறியீட்டினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News March 6, 2026
அரியலூர் மக்களே இன்று இதை மறக்காதீங்க!

அரியலூர் மக்களே இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5:30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News March 6, 2026
அரியலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

அரியலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
அரியலூர்: குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள நாச்சியார் குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளிக்கூட தெருவைச் சார்ந்த ரவி என்பவர் மனைவி பஞ்சவர்ணம் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இவர் கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.


